பிரபல யூடியூபர் விஜே சித்து தனது செல்ல நாய்க்குட்டியான இனியனை வைத்து தொடர்ந்து பல சுவாரஸ்யமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அவர் இனியனை அழைத்துக்கொண்டு ஓட்டலில் தங்குவதற்கு முயற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சித்துவும் அவரது நண்பர்களும் இனியனை அழைத்துக்கொண்டு பல ஓட்டல்களுக்குச் சென்றும், பெரும்பாலான இடங்களில் நாய்க்குட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இறுதியில் ஒரு ஓட்டலில் முன்பதிவு செய்துவிட்டு, ஓட்டல் நிர்வாகத்திற்கு தெரியாமல் இனியனை உள்ளே தூக்கிச் சென்றுள்ளனர்.
ஆனால், இனியன் அங்கு சென்றதும் தனது அட்டகாசத்தை ஆரம்பித்துள்ளது. விடிய விடிய யாரையும் தூங்க விடாமல் குரைத்தும், விளையாடியும் தொந்தரவு செய்துள்ளது.
இதற்கிடையில் சித்துவும் அவரது நண்பர்களும் அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருக்கும் காட்சிகள் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் இனியன் ஓட்டலில் இருந்த தலையணை ஒன்றை கடித்து குதறி, பஞ்சை வெளியே எடுத்து போட்டுவிட்டது.
இதைப்பார்த்து பதறிப்போன சித்து, "டேய் இது ஓட்டல் டா" என்று புலம்பும் காட்சி சிரிப்பை வரவழைக்கிறது. வீடியோவின் இறுதியில் அனைவரும் ஜாலியாக நடனமாடிக் கொண்டிருக்க, திடீரென இரவு மூன்று மணிக்கு காலிங் பெல் அடிக்கிறது.
காலிங் பெல் அடித்தது யார்? நாய்க்குட்டியை உள்ளே கொண்டு வந்ததை ஓட்டல் நிர்வாகத்தினர் கண்டுபிடித்து விட்டார்களா? என்ற கேள்விகளுடன் வீடியோ முடிவடைகிறது.
அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த கலகலப்பான வீடியோ தற்போது இணையத்தில் பலரையும் கவர்ந்து வருகிறது.
0 கருத்துகள்