போடு தகிட தகிட..! - கைதி 2 குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்ன கூறியுள்ளார் பாருங்க..!


கைதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிட ம்ஆரவாரமான வரவேற்பை பெற்றுள்ளது. படம் தொடங்கிய நிமிடத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை சலிப்பு தட்டாத படத்தின் திரைக்கதையும் கதையின் மீது ரசிகர்களுக்கு ஏற்பட்ட பிடிப்பு விட்டுப்போகமல் கதையை நகர்த்தி சென்ற விதத்திலும் கைதி வெற்றி பெற்றுவிட்டான். 

இந்நிலையில், படத்தில் வரும் முக்கிய வில்லனான அடைக்களம் சிறையில் இருப்பது போன்றே படம் முடிக்கப்பட்டது. 

மேலும், க்ளைமாக்ஸ் காட்சியில் யாருன்னே அவன், சம்பந்தமே இல்லாம உள்ள புகுந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான் என்று ஒரு அல்லக்கை கேட்கும் போது " சம்பந்தம் இருக்கு..! அவன் பேரு டெல்லி.." என்று சொல்வதோடு முடிகிறது படம். இதனை வைத்து பார்க்கும் போது கைதி இரண்டாம் பாகம் வரும் என ரசிகர்கள் யூகித்து விட்டனர். 

மேலும், கைதி 2 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஷயத்தை காய போடாமல் உடனடியாக பதிலளித்துள்ளார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். 

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளதன் படி " எனக்கு வாய்ப்பு கொடுத்த கார்த்திக்கும், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் நன்றி. எங்கள் உழைப்பிற்கு கிடைத்த இந்த வரவேற்பை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். மேலும், நீங்கள் ஆவலோடு கேட்டுவரும் கேள்விக்கும் பதில் செல்கிறேன். ஆம், டெல்லி மீண்டும் வருவான்" என்று கூறியுள்ளார். 

இதன் மூலம், கைதி இரண்டாம் பாகம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement