கேரள யானை ஒன்று அன்னாசி பழத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை தெரியாமல் உண்டதில் வாய் வெடித்து சிதறியது. இதனால் கடந்த சில நாட்களாகவே வலியால் துடிதுடித்து சமீபத்தில் இறந்தது.
அந்த யானை இறக்கும்போது கர்ப்பமாக இருந்தது என்பதுதான் இதில் மனதை உலுக்கும் இன்னொரு விஷயம் இந்த நிகழ்வு மனிதாபிமானம் கொண்ட பலரையும் கோபத்தின் எல்லைக்கே அழைத்து சென்றது.
பலரும் இந்த செயலை செய்த அந்த கொடூரனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மீடியாக்களில் கொந்தளித்து வந்தனர். இந்தநிலையில் நடிகர் லிங்குசாமி இந்த விவகாரத்தில் யானை இறப்பதற்கு காரணமாக அமைந்த நபருக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும் என முடிவு செய்து அவரது மனதிற்குள்ளே அந்த தண்டனையையும் நிறைவேற்றி கற்பனை செய்து பார்த்தள்ளார்.
அது என்ன தண்டனை என்பது குறித்து அவர் ஒரு ட்விட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில் “கடைசியில் அவனை கண்டறிந்த பிறகு என்ன தண்டனை கொடுக்கலாம் என்ற பல யோசனைகளுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்தேன். இரண்டு யானை தந்தங்களை எடுத்துக்கொண்டேன். ஒரு தந்தத்தை கொண்டு நடு முதுகில் யானை பலம் கொண்டு இறக்கினேன். இன்னொரு தந்தத்தை கொண்டு கீழ் வழியாக விட்டு மேல் நோக்கி ஏற்றினேன். ஆனால்,, அப்போதும் தீர்ந்தபாடிலை கோபம். ஏனெனில் அவன் கர்ப்பம் தரித்திருக்கவில்லை” என தனது ஆதங்கத்தை கோபமாக வெளிப்படுத்தியுள்ளார் லிங்குசாமி.
0 கருத்துகள்