விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சின்னத்திரையில் டாப்பில் உள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலின் அடுத்த வார ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோ வீடியோவில் நகைச்சுவை காட்சிகள் நிறைந்திருப்பது ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
புதிய ப்ரோமோவில், விஜயா தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்து அதற்காக நிபுணர் ஒருவரை வீட்டுக்கு அழைக்கிறார்.
உடல் எடையை குறைப்பதற்கான வழிமுறைகளை நிபுணர் விஜயாவுக்கு விளக்க, அதை அவர் கவனமாக கேட்கிறார். நிபுணர் சொல்லும் டயட் முறையை விஜயா மட்டுமின்றி அவரது மகன் மனோஜூம் தீவிரமாக பின்பற்றுகின்றனர்.
ஆரம்பத்தில் டயட் எல்லாம் நன்றாக இருப்பதாக விஜயா சந்தோஷப்படுகிறார். ஆனால், போக போக நிலைமை மாறுகிறது. டயட்டை ஆரம்பித்த சில நாட்களிலேயே விஜயா மற்றும் மனோஜ் இருவருக்கும் வயிறு வலி வந்து பாடாய் படுத்துகிறது.
வயிற்று வலியால் துடித்து பெட் ரூமுக்கும், பாத் ரூமுக்கும் மாறி மாறி ஓடுகின்றனர். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல், "ஐய்யையோ எங்களால் முடியல" என இருவரும் கதற ஆரம்பித்து விடுகின்றனர்.
கடைசியில் இந்த டயட் தங்களுக்கு சரிப்பட்டு வராது என இருவரும் டயட் வேண்டாம் என்ற முடிவுக்கு வருகின்றனர்.
சீரியலின் கதை ஒரு பக்கம் சீரியஸாக நகர்ந்து கொண்டிருந்தாலும், அவ்வப்போது இதுபோன்ற நகைச்சுவை காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இதோ அந்த சுவாரஸ்யமான ப்ரோமோ வீடியோ:
0 கருத்துகள்