"அதை மெதுவா பண்ணா செக்ஸியா இருக்கும்.. வேகமா பண்ணா ஒண்ணுமே இருக்காது.." கூச்சமின்றி கூறிய ரச்சிதா மகாலட்சுமி..!

பிரபல நடிகை ரச்சிதா மகாலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

அதில், ரசிகர்கள் சிலர் அவரது நடிப்பில் "செக்ஸியான முக பாவனைகள்" இருப்பதாக கூறுவது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். அது உண்மை இல்லை என்றும், அது கேமரா ட்ரிக் என்றும் அவர் கூறியிருப்பது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. 

ரச்சிதா மகாலட்சுமி அந்த பேட்டியில் கூறியதாவது, "செக்ஸியான முக பாவனைகளுடன் நடிக்கிறேன் என்று சொல்கிறார்கள், அது அப்படி கிடையாது. நாம் சாதாரணமாக செய்யக்கூடிய ஒரு அசைவை பார்த்தால் அது செக்ஸியாக தெரியும். 

ஒரு வீடியோவை நீங்கள் சாதாரண வேகத்தில் பார்க்கும்போது அதில் எந்த கவர்ச்சியும் உங்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அசைவை ஸ்லோமோஷனில் நீங்கள் பார்க்கும் போது அது செக்ஸியாக தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

இது கேமரா ட்ரிக் தானே தவிர நாம் கவர்ச்சியாக நடிக்கிறோம் மோசமான முகபாவனை வெளிப்படுத்துகிறோம் அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது. நான் இது நாள் வரை அப்படி எந்த ஒரு முகபாவனையும் வெளியிட்டு நடிச்சது கிடையாது. 

ஒரு நடிகையின் சாதாரண வீடியோவை ஸ்லோவாக செய்து பார்த்தால் ரொமான்டிக்காக தெரிய வாய்ப்பு இருக்கிறது. அதையே வேகமாக செய்தால் ஒன்றுமே இருக்காது.. இதுதான் இப்படியான முக பாவனைகள் குறித்து என்னுடைய கருத்து," என்று தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். 

அதாவது, ரச்சிதா மகாலட்சுமி தான் வேண்டுமென்றே கவர்ச்சியான முக பாவனைகளை வெளிப்படுத்துவதில்லை என்றும், கேமராவின் ஸ்லோமோஷன் போன்ற தொழில்நுட்ப உத்திகளே சாதாரண அசைவுகளை கூட கவர்ச்சியாக மாற்றிக் காட்டுகின்றன என்றும் கூறுகிறார். 

சர்ச்சைக்குறிய கிரிக்கெட் வீரருடன் நெருக்கமாக சீரியல் நடிகை பிரவீனா..! புகைப்படங்கள் வைரல்..!

சர்ச்சைக்குறிய கிரிக்கெட் வீரருடன் நெருக்கமாக சீரியல் நடிகை பிரவீனா..! புகைப்படங்கள் வைரல்..!

அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் பலவிதமான விவாதங்களை கிளப்பியுள்ளது. ரச்சிதா மகாலட்சுமியின் ரசிகர்கள் சிலர், அவர் கூறுவது உண்மைதான் என்றும், கேமரா கோணங்கள் மற்றும் ஸ்லோமோஷன் போன்ற விஷயங்களால் சில நேரங்களில் தோற்றங்கள் மாற வாய்ப்புள்ளது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் சிலர், ரச்சிதா வேண்டுமென்றே கவர்ச்சியாக நடிக்கிறார் என்று குற்றம் சாட்டி வரும் விமர்சனங்களுக்கு இது ஒரு சரியான பதிலடி என்றும் கூறுகின்றனர். இருப்பினும், இன்னும் சிலர் ரச்சிதாவின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 

அவர் வேண்டுமென்றே கவர்ச்சியான முக பாவனைகளை வெளிப்படுத்துகிறார் என்றும், அதனை கேமரா ட்ரிக் என்று சொல்லி சமாளிக்க பார்க்கிறார் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். 

எது எப்படி இருந்தாலும், ரச்சிதா மகாலட்சுமியின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் ஒரு விவாதத்தை கிளப்பி உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. 

அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் என இருவேறு விதமான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக காணப்படுகின்றன. நடிகை ரச்சிதா மகாலட்சுமி இந்த விஷயத்தில் கூறியிருக்கும் கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்