பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விஷால் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
அதில், நடிகர் விஷாலுக்காக நடிகை கீர்த்தி சுரேஷிடம் பெண் பேச சென்ற நிகழ்வை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.
லிங்குசாமி கூறுகையில், "விஷாலுக்கு கீர்த்தியைப் பெண் கேட்டு சொல்லுங்கன்னு விஷால் அப்பா (தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டி) சொன்னார். நானும் அப்படியே கீர்த்தியை சந்திக்க சென்றேன். நான் கீர்த்திகிட்டே போய் நின்னதும், ‘என்ன சார் இவ்வளவு தூரம்’னு கேட்டாங்க.
விஷால் பற்றி நான் சொன்னதும், கீர்த்தி உடனே தன்னுடைய பள்ளி பருவ காதல் கதையை கூறினார். அவர் பள்ளியில் இருந்து காதலித்து வந்த ஒருவரைப் பற்றி சொன்னார்.
அவர்தான் கீர்த்தியை இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்தார். மேலும், கீர்த்தி சுரேஷின் கணவர் குறித்து பேசிய லிங்குசாமி, "கீர்த்தியோட வெற்றிக்குப் பெரிய பின்புலம் அந்தப் பையன்தான்.
அவருடைய ஆதரவு கீர்த்திக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறது. சமீபத்தில் கீர்த்திக்கு திருமணம் நடந்தது. மூன்று நாள் திருமண வைபவத்திற்கு நான் போயிருந்தேன்.
ரொம்ப முக்கியமானவர்களைத்தான் அந்த திருமணத்திற்கு கூப்பிட்டிருந்தாங்க" என்றும் கூறினார். லிங்குசாமி பகிர்ந்த இந்த தகவல், விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதே சமயம் கீர்த்தி சுரேஷின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து பலரும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.
தற்போது கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்