என் குழந்தைகளுக்கு தந்தை யார்..? நடிகர் சூரியாவின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகர் சூர்யா ஜோதிகா இருவரும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள். காதலுக்கு அடையாளமாக சூர்யா ஜோதிகா என்ற ஒரு பெயர் விளங்கி வருகிறது. 

Advertisement

இந்நிலையில் கூட்டுக் குடும்பமாக இருந்த இவர்களுடைய குடும்பம் தற்போது தனி குடித்தனம் செல்லும் அளவுக்கு சென்றிருக்கிறது. இதற்கு காரணம் தன்னுடைய குழந்தைகளின் படிப்பு என்று கூறுகிறார் நடிகர் சூர்யா. 

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

அவர் கூறியதாவது, ஜோதிகா ஒரு அற்புதமான இல்லத்தரசி. அவர் குடும்பத்துக்காக அனைத்து பொறுப்பையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் தனது திரைப்படத்தை மீண்டும் தொடங்குவதற்கு சரியான நேரம் என்று ஒன்றை கருதினோம். 

அதற்குள் அவர் அற்புதமான குடும்பத்தை கட்டமைத்துவிட்டார். அப்போதுதான் மலையாளத்தில் ஹவ் ஓல்ட் ஆர் யூ படம் வெளியாகி இருந்தது. அது ஜோவின் கம்பேக் படமாக இருக்கலாம் என்று கருதினோம். 


ஆனால், 36 வயதினிலே என்று அந்த படம் தமிழில் ரீமேக் ஆனது. அப்படம் நிறைய விஷயங்களை உணர்த்தும் விதமாக அமைந்தது. ஆண்களும் பெண்களும் அந்த படத்தை பார்த்து உத்வேகம் அடைந்தார்கள். 

பெண்களை மதிக்கும் விதமாக அந்த படம் இருக்கும் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இதயபூர்வமான உரையாடல்கள் பெரும்பாலும் நடப்பது கிடையாது என்று நான் நினைக்கின்றேன். 

வீட்டில் பெண்கள் செய்யும் பணிகளையே நாம் மதிப்பது கிடையாது என்பது தான் எதார்த்தமான உண்மை. இதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். 

அதேபோல் சில நேரங்களில் என்னை நினைத்தால் எனக்கே குற்ற உணர்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் என் குழந்தைகளின் தந்தை யார்...? நானா..? அல்லது ஜோவா..? என்ற கேள்வி எனக்குள் எழும். 

ஏன் அப்படி கூறுகிறேன் என்றால், பெண்கள் தங்களுக்கு விருப்பமானதை செய்ய முடியாமல் போவதற்கு ஆண்கள் ஒரு காரணமாக அமைந்து விடுகிறார்கள். 

ஜோதிகா ஒரு நல்ல தாயாகவும், மனைவியாகவும் இருந்து ஒரு குடும்பத்தை வழிநடத்திற்கு என்ன தேவையோ அதை செய்தார். ஜோதிகா போல் என்னால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியாது. 

நான் ஒரு ஒழுக்கமான கணவன் என்று எனக்கு தெரியும். ஆனால், என் குழந்தைகளுக்கு ஒரு தந்தையாக செயல்படுகிறேனா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. 

எங்களுடைய குழந்தைகளுக்கு ஜோதிகா தாயாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த தந்தையாகவும் செயல்படுகிறார் என்று பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தன்னுடைய பிஸியான வேலைகளால் குழந்தைகளை பராமரிக்க தவறியதை நினைத்து சூரியா இப்படி மறைமுகமாக தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்