நீயெல்லாம் அப்பனா..? மனுஷனே கிடையாது.. நடிகர் அப்பாஸ் செய்த செயல் விளாசும் ரசிகர்கள்..!


நடிகர் அப்பாஸ் பற்றி பெரிய அறிமுகம் எதுவும் தேவையில்லை. 90களில் அஜித் விஜய் ரேஞ்சுக்கு முன்னணி நடிகராக உலா வந்து கொண்டிருந்தவர். 

ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அடுத்தடுத்த தோல்வி படங்களால் மார்க்கெட் இழந்து சினிமாவை விட்டு காணாமல் போனார் நடிகர் அப்பாஸ். 

Advertisement

இதற்கு முக்கிய காரணம் தன்னுடைய சில படங்கள் தொடர்ந்து ஹிட் ஆனதை தொடர்ந்து ஒரே நேரத்தில் 10 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு பத்து படத்திற்கும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் அப்பாஸ். 

அப்படி அட்வான்ஸ் வாங்கிய 10 படங்களில் முதலில் வெளியான இரண்டு மூன்று திரைப்படங்கள் தோல்வி படங்களாக அமையவே அடுத்தடுத்த படங்களில் அப்பாஸை நடிக்க வைக்க வேண்டாம் என்று ஏற்கனவே கொடுத்த அட்வான்ஸை மீதி இருந்த தயாரிப்பாளர்கள் வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். 

இதனால் மனதளவில் நொந்து போனார் நடிகர் அப்பாஸ். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த இவர் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

ஆனால், தன்னுடைய வாழ்க்கையை நடத்தும் அளவுக்கு இங்கே வருமானம் கிடைக்காத காரணத்தினால் வெளிநாட்டுக்கு சென்று பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. 

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அப்பாஸ் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அது என்னவென்றால் தன்னுடைய மகன் தன்னுடைய மகன் தானா.? என்று சந்தேகப்பட்டு DNA டெஸ்ட் எடுத்து பார்த்திருக்கிறார் அப்பாஸ். 

என்னடா கூத்தா இருக்குது..? என்று.. நடிகர் அப்பாஸ் சொல்வதைக் கேட்டால் இன்னும் ஷாக் ஆகி விடுவீர்கள். அதாவது, நடிகர் அப்பாஸ் இளம் வயதில் மிகவும் ரக்ஃகடான ஆளாக இருந்தாராம். 


ஆனால், அவருடைய மகன் அப்படி இல்லாமல் அமைதியான நபராக இருக்கவே இவன் நம்ம பையன் தானா என்ற சந்தேகம் அப்பாஸிற்கு வந்திருக்கிறது. இதன் காரணமாக DNA டெஸ்ட் எடுத்து பார்த்திருக்கிறார். 

கடைசியாக டிஎன்ஏ டெஸ்டில் இவர் உங்களுடைய மகன்தான் என்று ரிப்போர்ட் வந்திருக்கிறது. இதனை பேட்டியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார் நடிகர் அப்பாஸ். 

இதை கேட்ட ரசிகர்கள் நீ எல்லாம் அப்பனா..? நீ எல்லாம் மனுசனே கிடையாது..! என்பதில் ஆரம்பித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

மறுபக்கம் அப்பாஸ் கேளிக்கையாக சொன்ன விஷயத்தை இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்