பிரபல நடிகை தமன்னா மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் காதலித்து வந்த நிலையில், தற்போது அவர்கள் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருவதாக உறுதி செய்த இந்த ஜோடி, திடீரென பிரிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தமன்னா மற்றும் விஜய் வர்மா பிரிந்தது குறித்து இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஆனால், இதுவரை மறுப்பு எதுவும் தெரிவிக்காததால், அவர்களின் பிரிவு ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில், தமன்னா மற்றும் விஜய் வர்மா ஏன் பிரிந்தார்கள் என்பதற்கான காரணம் தற்போது கசிந்துள்ளது.
திருமண ஆசையே இந்த காதல் முறிவுக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை தமன்னாவிற்கு தற்போது 35 வயதாகிறது. இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை விஜய் வர்மாவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், விஜய் வர்மா தற்போது திருமணத்திற்கு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இன்னும் சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என அவர் தமன்னாவிடம் கூறியதாகவும் தெரிகிறது.
விஜய் வர்மாவின் இந்த முடிவை தமன்னாவும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாக தெரியவில்லை. தமன்னா மற்றும் விஜய் வர்மா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருப்போம்.
.jpg)
குழந்தை இருக்குன்னு சொல்லியும் விடல.. என் மார்பில் அதற்கு எதிராக.. இயக்குனர் டார்ச்சர்... போட்டு உடைத்த காஜல் அகர்வால்..!
தமன்னா மற்றும் விஜய் வர்மா காதல் முறிவு குறித்த இந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
0 கருத்துகள்